தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியது பாரிஸ் நகரம்: – நிம்மதியாக வாழ விட மாட்டோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட பகீர் வீடியோ

ssபாரிஸ் நகரின் மத்திய பகுதியில் தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 6 முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் Francoise Hollande நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் நாட்டின் அனைத்து எல்லைகளையும் உடனடியாக மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரான்ஸ் மக்களை நிம்மதியாக வாழ விட மாட்டோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட பகீர் வீடியோ

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் நிகழ்ந்து 153 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்படும் Al-Hayat என்ற செய்தி நிறுவனம் ஒன்று சில மணி நேரங்களுக்கு முன்னர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நீண்ட தாடி வைத்துள்ள தீவிரவாதி ஒருவன் தன்னுடைய சக தீவிரவாதிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறான்.

அப்போது பேசிய அவன், ”தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துங்கள். பிரான்ஸ் மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ கூடாது. சாதாரண பொதுமக்கள் வீதிகளில் பொருட்களை வாங்க செல்வதற்கு கூட அச்சப்பட வேண்டும்” என பேசியுள்ளான்.

மேலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து சிரியாவிற்கு பயணம் மேற்கொள்ள முடியாத இஸ்லாமியர்களை பிரான்ஸ் நாட்டில் பயங்கர தாக்குதல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளான்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய வீடியோ காட்சிகள், பிரான்ஸ் நாட்டில் மேலும் தாக்குதலை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், தற்போது வெளியாகியுள்ள வீடியோ எப்போது படமாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com