பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 8 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது, ‘சிரியாவுக்காகத்தான் இந்த தாக்குதல்’ என்று முழங்கியதாக, தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
பாரீஸின் பட்டக்லான் திரையரங்குக்குள் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும் படுகொலை செய்தனர்.
இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில், அமெரிக்கத் தலைமையிலான படையுடன் பிரான்ஸ் படையும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com

























