துருக்கியில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
துருக்கியின் அன்ட்டால்யா நகரில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே அங்கு நடைபெற்ற அதிரடி சோதனைகளில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களை சேர்ந்த பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கஸியன்டெப் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீஸ்-ராணுவ கூட்டுப்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின்போது ஐ.எஸ். தீவிரவாதிகளில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் அவனை பிடிக்கச் சென்ற நான்கு பொலிசார் படுகாயமடைந்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜி-20 மாநாடு நடைபெறும் வேளையில் துருக்கியில் நிகழ்ந்த இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com