அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்: வேடிக்கை பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி

rick_santorum_001ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருவதை தடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா சரியான திட்டங்களை வகுக்கவில்லை என அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளர் சரமாரியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பில் ரிக் சாண்டோரம் என்பவர் ஜனதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நேற்று புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிக் சாண்டோரம் ஜனாதிபதியான ஒபாமாவை சரமாரியாக சாடி பேசியுள்ளார்.

‘’ஐ.எஸ் தீவிரவாதிகளை வெற்றிக்கொள்ள ஒபாமா சரியான திட்டங்களை வகுக்க வில்லை. அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலால் ஆத்திரம் அடைந்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு பாரீஸில் நிகழ்ந்த கொடூரமான தற்கொலை படை தாக்குதல் ஒரு உதாரணம். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துக்கொண்டுருப்பதை பார்த்தும் அதன் உண்மை நிலையை ஒபாமா உணராமல் இருக்கிறார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஒபாமா நிறுத்துவிட்டு, ராணுவத்தை திரும்ப பெறாமல் இருந்தால், அமெரிக்காவிலும் மிக மோசமான தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளது.

பொதுமக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்துவதால், அதன் விளைவு அதே பொதுமக்களை தான் பாதிக்கிறது. இந்த உண்மை நிலையை ஒபாமா உணர்ந்து செயல்பட வேண்டும்” என ரிக் சாண்டோரம் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், ரிக் சாண்டோரமின் இந்த கருத்திற்கு வெள்ளை மாளிகை இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com0