அடுத்த குறி வாஷிங்டன் தான்: மிரட்டல் வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள்

is_tread_001சிரியாவில் தங்களுக்கு எதிராக  தாக்குதல் நடத்தி வரும் அனைத்து நாடுகளும் கடுமையான விளைவை சந்திக்கும் என ஐ.எஸ். அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.எஸ். அமைப்பினர் சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

மேலும் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில் தங்களின் அடுத்த குறி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றும் நபர் ஒருவர், பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று விரைவில் அமெரிக்காவின் வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக சிரியாவில் போரில் ஈடுபட்டு வரும் அனைத்து நாடுகளுக்கும் இதே நிலை தான் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் தாக்குதல் நடத்திய சில தினங்களில் ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com