ஐ.எஸ் தீவிரவாதிகள் பீதியடையும் வகையில் அவர்கள் கடத்தி சென்ற 116 எண்ணெய் லொறிகளை அமெரிக்க ராணுவத்தினர் சுக்கு நூறாக அழித்து துவம்சம் செய்துள்ளனர்.
சிரியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்வதில் மாதம்தோறும் 40 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
தீவிரவாதிகளின் பலத்தை குறைக்க வேண்டும் என்றால் அவர்களின் வருமானத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்க ராணுவத்தினர் ஏற்கனவே திட்டமிட்டுருந்தனர்.
இந்த கடத்தல் பணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் சுமார் 1000க்கும் அதிகமான லொறிகளை போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி அழிக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
எனினும், 1000 லொறிகளையும் அழிக்கும்போது அப்பகுதியில் உள்ள அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடும் என கருதி 116 லொறிகளுக்கு ராணுவத்தினர் குறி வைத்தனர்.
திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில் துருக்கி நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த A-10 வகையை சேர்ந்த 4 போர் விமானங்களும் AC-130 வகையை சேர்ந்த 2 விமானங்களும் இன்று அதிகாலை புறப்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள Deir al-Zour என்ற பகுதியில் சென்ற அமெரிக்க ராணுவத்தினர் 116 எண்ணெய் லொறிகளையும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.
எனினும், இந்த தாக்குதலுக்கும் பாரீஸில் நிகழ்ந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாரீஸ் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணெய் லொறிகளை அழிக்க அமெரிக்க ராணுவத்தினர் திட்டமிட்டுருந்தது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com
பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கலையில் அமெரிக்க அரசாங்கம் கை தேர்ந்தவர்கள்.