பாரீஸ் குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பாம்!

Logo-LTTEபிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு இணையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இக்குண்டுவெடிப்பு சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று இன்டர்போல் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரைக் கூட பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்ய முடியவில்லை.

அவ்வாறு தப்பிச் சென்ற தர்மராஜன் என்பவர் அண்மையில் பாரிஸ் நகரில் வைத்து இன்டர்போல் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அங்கிருந்த விடயம் பாரிஸ் பொலிசாருக்கு கடைசி வரை தெரிந்திருக்கவில்லை.

எனவே பிரான்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும், குர்திஷ் கெரில்லாக்களும் தொடர்புபட்டிருக்கலாம் என்று இன்டர்போல் பொலிசார் சந்தேகம் கொண்டுள்ளதாக திவயின செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.puthinamnews.com

TAGS: