5500 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்ஸ்: அதிர்ச்சியில் ஐ.எஸ்

anony_isis_001ஐ.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் தாக்குதலுக்கு காரணமாக ஐ.எஸ். அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் Anonymous என்ற குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர்.

அதில், ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக மாபெரும் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அனானிமஸ் குழுவை சேர்ந்த ஹேக்கர்கள் ஐ.எஸ்.அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர்கள் வெளியிட்டிருந்த பதிவில், ஐ.எஸ். அமைப்பினருக்கு சொந்தமான 5500 கணக்குகளை நாங்கள் ஹேக் செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் Anonymous குழுவை சேர்ந்த அலெக்ஸ் பவுச்சர் என்பவர் இது குறித்து கூறியதாவது, உலகளவில் சிறந்த ஹேர்க்கர்கள் எங்கள் குழுவில் உள்ளனர்.

அவர்களில் சிலர் ஐ.எஸ் அமைப்பினருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தங்கள் குழுவில் உள்ள ஹேக்கர்களை போன்ற திறமைசாலிகள் வேறு எந்த அமைப்பிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர்  இணைய தாக்குதல் ஐ.எஸ். அமைப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

-http://world.lankasri.com