ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவடையும் போர்: ரஷ்ய நாட்டை சேர்ந்த 160 ஜிகாதிகள் பலி

isis_russia_001ரஷ்ய நாட்டை விட்டு வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 160 ஜிகாதிகளை வேட்டையாடியுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர்.

சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்களை கவனிக்கும் வகையில், ரஷ்யாவின் இணை வெளியுறவு துறை அமைச்சரான Oleg Syromolotov என்பவரை ரஷ்ய அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், சிரியாவில் அண்மையில் நிகழ்ந்த தாக்குதல்களில் ரஷ்ய நாட்டை சேர்ந்த 160 ஜிகாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்ய நாட்டை விட்டு 2719 குடிமகன்கள் வெளியேறி ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வந்துள்ளனர்.

இவர்களில் தற்போது 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய நாட்டுக்கு திரும்பிய 73 தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஞ்சிய 36 தீவிரவாதிகளை கைது செய்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக இணை அமைச்சர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்ய பயணிகள் விமானம் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி 224 பேர் பலியானதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை இரட்டிப்பு செய்யப்படும் என்றும், விமானத்தை தாக்கிய தீவிரவாதிகள் உலகின் எந்த மூலைக்குக்கு சென்றாலும் அழிப்போம் என ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com