ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு புதிய நெருக்கடி: தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கும் சீனா அரசு

china_isis_001சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என சீன அரசு உறுதி பூண்டுள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங்க் நகரை சேர்ந்த Fan Jinghui(50) என்பவர் சில மாதங்களுக்கு முன் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிணையக்கைதியாக சிறை பிடிக்கப்பட்டார்.

அதே போல், நோர்வே நாட்டை சேர்ந்த Ole Johan Grimsgaard-Ofstad(48) என்பவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் Dabiqm என்ற பத்திரிகை சீன பிணையக்கைதியின் புகைப்படத்தை வெளியிட்டது.

அதில், ‘சீனா மற்றும் நோர்வே நாடுகளின் குடிமகன்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், இவர்களை திரும்ப பெற வேண்டும் என்றால் கணிசமான தொகையை தங்களுக்கு கொடுக்க வேண்டும்’ என இரு நாடுகளையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோரிக்கையை இரு நாடுகளும் ஏற்க மறுத்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், சில தினங்களுக்கு முன்னர் சீன மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த 2 பிணையக்கைதிகளையும் தலையில் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த தகவலை சீனாவின் வெளியுறவு துறை நேற்று நள்ளிரவு உறுதி செய்தது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு துறை, சீனா குடிமகனை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளது உறுதி செய்ப்பட்டுள்ளது. இந்த கொடூர நடவடிக்கைக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவோம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டு பிரதமரான Erna Solberg கூறுகையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் புரிந்துள்ள இந்த காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்கவே முடியாது.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல்பாடுகளால் துயரத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அவர்களால் ஒருபோதும் வெற்றிக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

-http://world.lankasri.com