ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்தும் பள்ளிக்கூடமும், அவற்றில் மாணவர்களுக்கு கற்றுத்தரும் பாடங்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்கு மாணவர்கள் அனைவரும் செல்கின்றனர்.
வகுப்பிற்குள் வரும் மாணவர்களை வரவேற்கும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஆசிரியர், அங்குள்ள பலகையில் “ஜிகாத்” என்ற வார்த்தையை எழுதுகிறார்.
பின்னர் மாணவர்களை பார்த்து அதன் என்னவென்று கேட்கிறார், மாணவர்களும் ஜிகாத் என்று ஒருமித்த குரலில் பதிலளிக்கின்றனர், பின்னர் ஜிகாத் என்றால், நாம் கடவுளின் பாதையில் செல்வதாகும் என்று விளக்கம் கொடுக்கிறார்.
பின்னர், ஒரு மாணவனை எழுப்பி துப்பாக்கியை காட்டி இது என்னவென்று கேட்கிறார், அந்த மாணவனும் அது துப்பாக்கி என்று பதிலளிக்கிறார், அடுத்த கேள்வியாக எதற்காக இதனை பயன்படுத்துகிறோம்? என்கிறார், அந்த மாணவனும் பாதுகாப்பிற்காக என்று பதிலளிக்கிறான்.
பின்னர் வெடிகுண்டு மற்றும் TT துப்பாக்கியை காட்டி இதன் பெயர் என்ன? இது எங்கு தயாரிக்கப்படுகிறது? இதில் எத்தனை குண்டுகள் போடலாம்? எவ்வாறு சுடுவது? போன்றவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.
இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 10 வயதை கூட அடைந்திருக்கமாட்டார்கள், இந்த வீடியோவை ஆரம்பத்தில் பார்க்கும் போது, மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான பாடத்தினை படிப்பதற்காக பள்ளிக்கு செல்கிறார்கள் என்று பார்த்தால், எதிர்காலத்தில் பிறரின் வாழ்க்கையை எவ்வாறு அழிப்பது என்பதனை கற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு செல்கிறார்கள்.
சிறு வயதிலேயே பிஞ்சு குழந்தைகளின் மனதை மாற்றி தீவிரவாதத்தை ஐ.எஸ் அமைப்பினர் கற்றுக்கொடுக்கிறார்கள்.
-http://world.lankasri.com