திருகோணமலை இரகசிய தடுப்பு முகாம் குறித்து விசாரணை: வெளிவிவகார அமைச்சு

Mahishiniதிருகோணமலை கடற்படைத் தளத்தில் இயங்கிய இரகசிய தடுப்பு முகாம் பற்றி விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தடுப்பு முகாம்கள் இரகசியமான முறையில் கையாளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானபோது அதனை எச்சந்தர்ப்பத்திலும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் எத்தனிக்கவில்லை மாறாக சரியான தகவல்களை பெற்றுத் தாருங்கள் விசாரணை நடத்தி உண்மையினை கண்டறிவோம் என்றே கூறியிருந்தது. அதற்கமைய ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு கேட்டுக்கொண்டதன்படி இரகசிய தடுப்பு முகாம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

– puthinamnews.com

TAGS: