தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே வெளிநாட்டு நீதிபதிகள் குறித்த கோரிக்கை! இரா. சம்பந்தன்

sambanthanவெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் மூலமாக மட்டுமே போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த முடியும் என்று இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்,

வெளிநாட்டு நீதிபதிகளை மட்டுமே கொண்ட விசாரணைப் பொறிமுறையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்று ராணுவத்தினரும் சிங்கள மக்களும் நினைக்கின்றார்கள். அதில் தவறு இருப்பதாக நான் கூறவில்லை.

அதே போன்று தனி சிங்கள நீதிபதிகள் இருக்கும் இடத்தில் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு சந்தேகம் நிலவுகின்றது.

எனவே தான் இருதரப்புக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட குழுவொன்று போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

அவ்வாறான ஒரு விசாரணைப் பொறிமுறை மூலமாக மட்டுமே இந்த விசாரணைகள் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: