கனடாவில் குடியேற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி: அரசு அதிரடி முடிவு

canadagirl_women_001பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் தனி ஆண்களாக வருபவர்களுக்கு கனடாவில் புகலிடம் அளிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பாராளுமன்ற பொது தேர்தலின்போது, சிரியா நாட்டை சேர்ந்த சுமார் 25,000 அகதிகளை கனடாவில் குடியேற அனுமதி அளிக்கப்படும் என லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ரூடோ அறிவித்திருந்தார்.

தற்போது அதிக பெரும்பான்மையுடன் பிரதமராக வெற்றி பெற்றுருக்கும் நிலையில், ஏற்கனவே கூறியதுபோல சிரியா அகதிகளை கனடாவிற்குள் அனுமதிப்பது தொடர்பான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

எனினும், இந்த புகலிட அனுமதி அளிப்பதில் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பமாக வரும் நபர்களை தவிர, தனி நபர்களாக புகலிடம் கோரி வரும் ஆண்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாக கனடாவில் வெளியாகும் CBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டமானது சிரியா அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.

சிரியா அகதிகளுக்கு புகலிட அனுமதி அளிப்பது தொடர்பாக நாளை அறிவிப்பு வெளியிட உள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் சனவரி 1ம் திகதிக்குள் கனடாவில் உள்ள ஓண்டோரியோ நகரில் சுமார் 10,000 சிரியா அகதிகளுக்கு புகலிட அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

கடந்த வாரம் பாரீஸில் நிகழ்ந்த பயங்கர தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து, கனடா நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com