துனீசியா பேருந்து குண்டு வெடிப்பு: ஐ.எஸ். பொறுப்பேற்பு

tunisiaதுனீசியாவில், அதிபரின் பாதுகாவல் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தங்களது அமைப்பைச் சேர்ந்த அபு அப்துல்லா அல்-துனீஸி என்பவர் அந்தப் பேருந்தில் ஏறி, தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அந்த அமைப்பு கூறியது.

அதிபர் பெஜி கெய்த் எùஸப்ஸியின் பாதுகாவலர்கள் சென்று சென்று கொண்டிருந்த பேருந்து, துனீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இதில், பேருந்திலிருந்த 12 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து துனீசியாவில் 30 நாள்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

லிபியா எல்லை மூடல்: பேருந்து குண்டு வெடிப்பின் எதிரொலியாக, லிபியா எல்லை மூடப்பட்டுள்ளதாக துனீசியா அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து அரசு தரப்பில் விளக்கம் தரப்படவில்லை.

எனினும், கடந்த ஆண்டு லிபியாவிலிருந்து வரும் வழியில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருளே, பேருந்து குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து அந்த நாட்டு எல்லை மூடப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

துனீசியாவில் நீண்ட காலம் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த எல் அபிடைன் பென் அலி, மக்கள் புரட்சியின் மூலம் 2011-ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்து, அந்த நாட்டில் தொடர்ந்து பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

-http://www.dinamani.com