ஐ.எஸ். அமைப்புக்கு மறைமுகமாக உதவுகிறதா துருக்கி? ஈராக் எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு

is_oil_003ஐ.எஸ். அமைப்பினர் கள்ளச்சந்தையில் பெட்ரோலிய பொருட்களை துருக்கிக்கு விற்பனை செய்வதாகவும், அந்நாட்டு அரசாங்கத்துக்கு தெரிந்தே இந்த விற்பனை நடைபெறுவதாகவும் ஈராக்கை சேர்ந்த எம்.பி. ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலக அளவில் பல்வேறு நாசவேளைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினர் சர்வதேச அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர்.

கள்ளச்சந்தையில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வது மூலமே அவர்களுக்கு பெரும் வருவாய் கிடைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினர் துருக்கி நாட்டு வியாபாரிகளுக்கு அதிக அளவு பெட்ரோலிய பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதாகவும், அந்நாட்டு அரசாங்கத்துக்கு இது தெரியும் என்றும் ஈராக் நாட்டை சேர்ந்த எம்.பி.யும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான மொவாபக் அல் ருப்பே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது, கடந்த 8 மாதங்களில் சுமார் 800 மில்லியன் டொலர் மதிப்புள்ள பெட்ரோலிய பொருட்களை ஐ.எஸ். அமைப்பினர் கள்ளச் சந்தையில் துருக்கிக்கு விற்றுள்ளனர்.

இவ்வாறு பெறப்படும் பெட்ரோலிய பொருட்கள் துருக்கியில் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் சர்வதேச சந்தைக்கு அனுப்படுகிறது.

துருக்கியின் அரசாங்கத்துக்கு தெரியாமல் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை.

மேலும் பாதுகாப்பு அதிகாரிகளிந் ஆதரவுடனேயே துருக்கி வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த விற்பனையில் ஈடுபடுகின்றனர்

இவ்வாறு கிடைக்கும் வாருவாயே ஐ.எஸ். அமைப்பினருக்கான ஆக்சிஜன் ஆகும். இதை தடுத்தாலே ஐ.எஸ். அமைப்பினரை கட்டுப்படுத்தி விடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலில் காயமடையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கியில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

-http://world.lankasri.com