இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்த வடக்கில் புதிய போராட்டம் ஆரம்பம்

mannar_fhiserஇலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழையும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளை கண்டித்து அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வட மாகாண மீனவ அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிநாட்டு தூதுவர்களுக்கு தபாலட்டை அனுப்பும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் இலங்கை அரசிற்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையும் அதனால் எமது மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக முன் வைத்து புதிய நடைமுறையாக தபாலட்டை போராட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுத்தோம்.

குறித்த போராட்டமானது வடமாகாண மீனவர்களை பொருத்த மட்டில் வெற்றியை தந்துள்ளது.

இலங்கை அரசிற்கு நாம் கொடுக்கும் அலுத்தத்தின் காரணமாக உடனடியாக வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கான சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் ஊடாக இந்திய இலுவைப்படகுகளும், ஏனைய வெளிநாட்டுப் படகுகளும் எமது எல்லையை தாண்டும் போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

தொடர்ச்சியாக அவ்விடையம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது சட்டமாக்கும் பட்சத்தில் வெளிநாட்டு படகுகளின் வருகையை நிறுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

இலங்கை கடற்படையினர் அவ்வப்போது இந்திய மீனவர்களை எமது கடற்பகுதியில் வைத்து கைது செய்தாலும் அவர்களின் வருகை குறைந்தபாடு இல்லை.

இந்த நிலையில் எமது தொடர் நடவடிக்கையாக எதிர் காலத்தில் இதை முன்னெடுக்கக்கூடிய புதிய நடவடிக்கையாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு எமது மனுவை அனுப்பி மீண்டும் தபாலட்டை போராட்டமாகவும், மனு கையளிக்கும் நிகழ்வாகவும் மேற்கொள்ள தீர்மானித்துள்ள நிலையில் கடந்த 1 ஆம் திகதி அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

அதன் முதற்கட்டமாக நேற்று மன்னாரில் ஆரம்பித்து வைத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனவே இத் தீர்மானத்தின் ஊடாக இலங்கை அரசிங்கும் இந்திய அரசிற்கும் ஒரு அலுத்தத்தைக் கொடுத்து இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான வருகையை நிறுத்தக்கூடிய வழி வகைகளை மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இந்த நடவடிக்கைக்கும் அவர்கள் தலை சாய்க்காது தொடர்ச்சியாக வருகை தந்து கொண்டிருந்தால் அவர்களின் வருகையை நிறுத்த வேறு வகையில் கையாண்டு அவர்களின் வருகையை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என வட மாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: