வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவும்படி ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம் அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.
வரலாறு காணா அளவு பெருமழையால் எமது தொப்பூள் கொடி உறவுகள் தமிழகத்தில் பெரு வெள்ளத்தில் இலட்சக்கணக்கில் சிக்கித் தவிப்பது கண்டு ஈழ மக்கள் இதயம் வருந்துகின்றனர்.
எப்பொழுதும் ஈழ மக்களின் இதயங்களில் குடியிருக்கும் தாய்த் தமிழக மக்களை பெருமளவில் பெருமழை துயர்படுத்தியுள்ளது.அழகிய தமிழகம் வெள்ளக்காடாய் மாறியிருக்கின்றது.
சகல அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு பெருமழை தமிழக மக்களின் வாழ்வில் பெரும் இடரை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்து மழையில் தவிக்கும் உறவுகளின் துயரில் நாமும் எமது ஈழ மக்கள் சார்பில் பங்கெடுக்கின்றோம்.
வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் அனர்த்த முகாமைத்துவம் சிறப்புற நடைபெற்று தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழக்கை மீண்டும் மகிழ்வுடன் அமைய வேண்டுமென நாம் பிரார்த்திக்கின்றோம்.
இதே வேளை ஈழ மக்கள் துன்புறும் வேளைகளில் எல்லாம் கண்ணீர் சிந்தி எம் காப்பரணாய் மாறத்துடிக்கும் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ புலம்பெயர் ஈழ மக்களையும் உலகமெலாம் வாழும் தமிழ் உறவுகளையும் மனிதாபிமானம் உள்ள மக்களையும் அமைப்புக்களையும், நிறுவனங்களையும் உதவும்படி நாம் அழைப்பு விடுகின்றோம்.
தமிழக முதல்வர் மாண்பு மிகு ஜெயலலிதா அம்மையாரின் பொது நிவாரண நிதியத்துக்கு Chief Minister public relief fund உங்கள் உதவிகளை வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் இந்த துயர் நிலையில் கைகொடுக்கவேண்டுமென வேண்டுகின்றோம் .
.புலம்பெயர் ஈழ தமிழ் உறவுகள் மற்றும் உலகமெலாம் வாழும் மனிதாபிமானம் உள்ள உறவுகள் இந்திய நாடளுமன்ற உறுப்பினர் திரு.இரவி பேணாட் அவர்களின் 00919940695552 என்ற தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டு மேற்படி நிதியம் பற்றிய தகவல்களைப்பெறமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் ….தலிவரிடம் பணம் மலை மாதிரி இந்தியாவிலும் வெளிநாடிலும் உள்ளது ….அப்படி அள்ளி எறிவார் …2009 மே நடந்த ஈழ இன அழிப்பு ஜாபகம் வருகின்றது …அன்று தங்க தமிழகத்தில் மக்கள் புதிய படங்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் ..