தேடப்படும் நபர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும்போது ஹிஷாமுக்கு ஏன் விதிக்கப்பட்டது தடை?

activistசமூக  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  நாட்டை விட்டு  வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டிருப்பது  ஏன்  என்று  அரசாங்கம்  விளக்கமளிக்க  வேண்டும்  எனத்  தேர்தல்  சீர்திருத்தங்களுக்குப்  போராடும்  பெர்சே  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

அதிகாரிகளால்  தேடப்படும்  நபர்கள்  எல்லாம்  சுதந்திரமாக  உலகைச்  சுற்றிக்  கொண்டிருக்கும்போது  ஹிஷாமுடின்  மட்டும்  வெளிநாடு  செல்ல  முடியாமல்  தடுக்கப்படுவது  ஏன்  என்று  அது  வினவியது.

ஹிஷாமுடின்  நாளை சோல்  நகர்  பிளாசாவில்  நடைபெறும்  அமைதிப்  பேரணி  ஒன்றைப்  பார்வையிட  கொரியாவுக்குச்  செல்ல  விருந்தார்.

அதற்காக  நேற்றிரவு  விமான  நிலையம்  சென்றபோது  அங்கு  அவர்  தடுத்து  நிறுத்தப்பட்டார்.