விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகள் இலங்கை கடற்படையினருக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அதற்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவும் வெளிநாடுகளின் புலனாய்வு உதவிகளை பெற்றதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா, சீனா இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் போரின் போது உதவியளித்தன என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று உறுதியளித்தே ஜெனீவாவில் இந்தியாவின் உதவியை இலங்கை பெற்றுக்கொண்டது என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்.
முன்னைய அரசாங்கமே ஐக்கிய நாடுகள் சபையை இலங்கையின் உள்விடயங்களில் தலையிட வழிவகுத்தது
எனினும் இன்று தமது பிழைகளை திருத்தமுனைகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
அரசாங்கத்தை பொறுத்தவரை அது இராணுவத்தினருக்கு எதிராக செயற்படாது.
எனினும் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை மற்றும் ஊடகவியலளார் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினருக்கு தொடர்புகள் உள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com
ஆனால் ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை கிடையாது …ஹி ஹி ஹி …தலிவர் பேச்சு மாதிரி உள்ளது