ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுவது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் , விவாதித்ததாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு நட்பு நாடுகளை பிரான்ஸ் கேட்டுக் கொண்டது. பிரான்ஸின் அந்தக் கோரிக்கையை ஏற்று, சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜெர்மனி அரசு சம்மதித்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரூனுடன் பேசினார். அப்போது ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளியை அறிக்கை தெர்வித்துள்ளது.
-http://www.dinamani.com