வரலாறு காணாத..வெள்ள பாதிப்புக்கு..’ரஜினி’..10 லட்சம் நிதி!
ஏன்..மிஸ்டர்..ரஜினி!…தமிழன்
ஒங்களுக்கு… போஸ்ட்டரே..1000..கோடிக்கு ஓட்டியிருப்பான்!
ஒங்களுடைய..10000..கோடி சொத்தும்..தமிழன் சொத்துதான்!
ஒங்களுக்கு கொஞ்சம்கூட…சங்கடமோ…குற்ற உணர்வோ…
கூச்சமோ இல்லையா? இருந்திருந்தா…இப்பிடி ..10..லட்சத்த
குடுத்து ..தமிழர்களை…கேவலப்படுத்தி இருப்பீங்களா?
இது..நீங்க ஒரு தடவை..உண்டியல்ல கொட்டுற …காசாகுமா?
இப்பிடில்லாம்..செய்து தமிழகத்தை அவமானப்படுத்தாதீங்க!
அதுசரி!…அப்புறம் என்னா…ம….னாவுக்கு…ஒங்க ஒரு சொட்டு வியர்வைக்கு…
ஒரு பவுன் தங்ககாசு…தமிழன் குடுத்தான்னு பம்மாத்துபாட்டு?
எங்க உயிர்போற நெருக்கடியிலேயே உங்க மனசு(!?)..இதானா?..
அதுவும் ..மத்தவன்ல்லாம் குடுத்தப்புறம்?
(ஒங்களுக்கு நன்றின்னு கொஞ்சமாவது இருந்தா மொதல்ல
ஒங்களோட கல்யாணமண்டபத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறந்துவிட்டு ..
அவங்களை தங்கவச்சி…எல்லோருக்கும்..
சோறு போடுங்க!…ஒண்ணும் ஏழையா ஆயிட மாட்டீங்க!)
என்ன ..செய்வது?
” ரஜினி …ரஜினியாவே …இருக்குறீங்க !
தமிழன் ..தமிழனாவே ….இருக்குறான்! “….அதுதான்..சிக்கல்!
தமிழன் எப்பிடிபோனா என்ன? இப்பிடியே நீங்க நல்லாஇருங்க
நிச்சயம் நல்லா இருப்பீங்க!…ஏன்னா..இப்பவே…தமிழன்
ஒங்க ..வரப்போற ‘கபாலி’…படத்துக்கு எத்தனை கோடி ரூபா
கட்அவுட்டு….பால் அபிஷேகம்..படபெட்டி..ஊர்வலம்ன்னு
மாவட்டமாநாடு போட்டுக்கிட்டு இருக்கான்..ஜமாய்ங்க..ரஜினி!
-அழகரசன் வீரபத்திரன்
“நான் 1 மில்லியன் கொடுத்த 100 மில்லியனுக்கு சமம்”……… வர்ட்டா?
SEMBARUTHI ,,,,,ENGGA குறை இருக்கோ அதை பார்க்காமல் எங்கு நிறை இருக்கோ அதை கண்டு POSITIFAAGA செய்திகளை போட கற்றுக்கொள்ளுங்கள் ,,முதலில் நீங்கள் யோக்கியமா என்று பாருங்க ,,வெல்ல நிவாரண நிதிக்கு நீங்க எவ்வளவு பணம் கொடுதேங்க ???,,கிலாந்தானில் வெள்ளம் ஏற்பட்டதில் ,,செம்பருதில் எவ்வளவு பணம் கொடுதேங்க ?? ஆரம்பகாலத்தில் உங்கள் பத்திரிக்கையை வாங்கி படிக்கும் பொது 3 வெள்ளி யில் இருந்து 5 வெள்ளி வரைக்கும் நாங்கள் ஆதரவு கொடுத்தோமே ,,இப்பொழுது அதே நாங்கள் வெள்ளத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறோமே ,,எவ்வளவு பணம் கொடுக்க போறேங்க ??? காசு இல்லைன்னா பருவா இல்லை ,,பிறரை குறைவாக பஉங்களிடம் அதிக குறை இருக்கிறது என்று அர்த்தம்
ரஜினி எப்போதும் தமிழருக்கு நன்றியுள்ளவராக இருந்ததில்லை. குறிப்பாக பணம் விஷயத்தில் அந்த ஆள் படு மோசம். தமிழர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கர்நாடகாவில் சொத்து வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். தன் மகள்கள் ஊதாரித்தனமாக செலவு செய்து கடனாளியாகி விட்டால் உடடினயாக கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு படத்தில் நடித்து அந்த கடனை அடைப்பதுதான் அவ்ரின் வாடிக்கையான செயல். தன்னை வாழ வைக்கும் தமிழர்களை பற்றி அவர் எப்போதும் கவலைப்பட்டத்தில்லை. எம்ஜிஆர் தனது சொத்தையெல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்தார். படத்தில் தண்ணி சிகிரெட் இல்லாமல் நடித்து இளைஞர்களுக்கு வழி காட்டியாக இருந்தார். ஆனால் ரஜினியோ எல்லா கெட்டப் பழக்கங்களையும் சினிமா மூலம் தமிழ் இளைஞர்களுக்கு போதித்து அவர்களை நாசமாக்கி விட்டார். இப்போது கூட பாருங்கள் வெள்ளப் நிதிக்கு வெறும் பத்து லட்சம் ரூபாய் கொடுத்து நமது இனத்தை கேவலப்படுத்திவிட்டார் என்ற அறியாத அளவுக்கு தனது ரசிகர்களை அவர் எந்த அளவுக்கு அப்பாவிகளாக ஆக்கி வைத்திருக்கிறார்.
இவர் தமிழ் நாடுகாரர் இல்லை.கர்நாடகா பூர்விகம்.இவர் மட்டும் அல்ல பணக்கார நடிகர்,நடிகை கூட நிதி வழங்காதது வருத்தமளிக்கிறது.நிதி வழங்காவிட்டாலும் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் அல்லது முடிந்த உதவி செய்யலாமே.அதுகூட இல்லை இந்த மனமில்லாத கோடிஸ்வரர்கள்.
அள்ளி கொடுத்தாலும் கில்லி கொடுத்தாலும் காலத்தில் செய்யும் உதவி மிகப்பெரியது , 10 கோடி ரஜினி கொடுத்தால்இந்திய அரசு பாராட்டாது
!
கருப்பு பணம் சிகப்பு பணம் என்று அவரை ஒரு வலி பண்ணி விடுவார்கள் , உண்மையாய் உதவும் மனிதர்கள் யாராக இருந்தாலும் .
நன்றி பாராட்ட கற்று கொள்ளுங்கள் .
வெட்கம் கெட்ட தமிழ் நட்டு பிறவிகள் என்றும் திருந்தாது …இன்று பிச்சைகாரனுக்கு கூட 10 பைசா போடுவதில்லை …நாளை இந்த வழுக்கையின் படம் என்றால் வீடு இழந்தவன் கூட கடன் வாங்கி பார்ப்பான் ..அந்த அளவு கேவலம் கெட்ட பிறவிகள் இந்த தமிழர் அல்லாத பிறவிகள்
தமிழா நாட்டில் எத்தனை தமிழ் நடிகர்கள் உள்ளார்கள் ? வந்தாரை வாழவைக்கும் தகர தமிழகம் எப்படி எதிர்பார்க்கமுடியும் உதவிகளை பிற மாநில நடிகர்களிடம் ..அரசியல் ..சினிமா ..தொழில் துறை எல்லாம் தகர தமிழகத்தில் இன்று தெலுங்கர்கள் கைகளில் ..குப்பனுக்கும் ..சுப்பனுக்கும் கிழிந்த கோவணம் மாத்திரம் மிச்சம்
ஒரு நபி தூர பயணம் செல்கையில் செல்வந்தர்கள் பொன்,பொருள்,பணம் கொடுத்தனர்,ஆனால் ஒரு வியாபாரியோ அவரிடம் வுள்ள பேரீச்சம் பழம் கொடுத்தாராம் அதற்க்கு அங்கே கூடியிருந்த செல்வந்தர்கள் நகைதனராம் ஆனால் அந்த பெரியோரோ அந்த பழத்தை பெற்று அங்கே பெரபற்ற விலையுயர்ந்த பொன் பொருள் மீது இறைத்து ஆசிகூரினாராம் அதாவது செல்வந்தர்கள் பெரும் அதே பலனை நீரும் பெறுவீர் யென்று,
வாழ்க நாராயண நாமம்.
நான் படித்ததில் ஷா ரூ கான் 50கொடி,இந்திகாரன் 50கொடி,தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் 10லட்சம்.கபாலிக்கு ஒ போடு.
ஷாருக் கான் ஒரு இந்தி நடிகன் -தமிழனை நம்பி நடிக்காதவன் – 1 கோடி ரூபாய் கொடுத்து உள்ளன் ..முன்னர் ஒருதடவை சிங்கள ராஜபக்ச அரசு பெரும் தொகை பேசி கலை நிகழ்ச்சி நடத்த அழைத்த போது ..தமிழர் உணர்வை மதித்து ..இலங்கை போக மறுத்தவன் …அனால் கன்னட வழுக்கை சூப்பர் ஸ்டார் என்று ஒரு label வேறு ….வெறும் 10 லட்சம் முணு முணுத்து விட்டு கொடுத்தானாம் …தகர தமிழகத்தில் எந்த பிறவிக்கும் மானம் ..வெட்கம் ..ரோசம் இல்லை
ரஜினியின் 10 லச்சம் கேவலம்மா இருக்கு. அதாவது ரம் 65 ஆயிரம்தான் இவரின் பல நடிகர் வேஷம். அவன் நூறு தர சொன்னாலும் 65 ஆயிரம்தான்.
கொடுத்த வாகிட்டு போங்கடா ,,இல்ல வெள்ளதில மூழ்கி சாவுங்கடா ,,,
Pon Rangan ,,அவர்களே நீங்கள் மட்டும் யோக்கியமா ,,கூத்தாடி இஸ்ரேயாவை வைத்து நிகழ்ச்சி பண்ண போறேன்க்கள ,வெக்கமா இல்ல ? அதுவும் தமிழ் பள்ளி அறக்கட்டளைக்கு ,,நாக்க புடிங்கிகிட்டு சாவுங்கியா
எதற்கு நடிகர்கள் கோடிகள் கொடுக்க வேண்டும்,கொடுத்ததின் விளைவு யாது ?.இன்று வரை மீட்ப்பு நடவடிக்கை எதுவரை முன்னேரிவுள்ளது ?.
நாராயண நாராயண.
ரஜினி எதுக்கு பணம்
குடுக்கணும் அவர் நடிக்கிறார் சம்பாதிக்கிறார் .அது அவரது சொந்த விசியம் …1000 கோடி மத்திய அரசு மாநில அரசு பணம் எல்லாம் எங்கே ??? ஆக கடைசி நிலவரம் ரஜினி மற்றும் ரஜினி ரசிகர் மன்றம் உதவி RM 50 மில்லியன் மேல் …….
ரஜினி 10 லச்சம் கொடுத்தா காசு இல்லையா?
பணம் கொடுக்க மனசு வேண்டும்.
எச்சிக்கையால் காக்க வெரட்டாத கபோதிஎல்லாம் ரஜினி பற்றி பேசுது.
இந்த குரங்கு சேஷ்டை கன்னட வழுக்கைக்கு ….ரசிகர் சங்கங்கள் வேறு …சிங்கள் டி குடிக்க வழியில்லாதவன் எல்லாம் குரங்கு சங்கம் வைத்து உள்ளார்கள் ..இந்த அழகில் மில்லியன் கணக்கில் உதவி வேறு அதுவும் மலேசிய ரிங்கிட் …புல்லரிகின்றது
கன்னடக்காரர் பணம் வுதவி,தமிழர் பெறுவது அவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் ஆதலால் தமிழர் அல்லாதோர் இனியாவது தமிழருக்கு துன்பம் கொடுப்பதை தவிர்க்கவும்.
தமிழர் பிரச்சனையை அவர்களே தீர்வை தேடிகொல்வர் மற்றவர் வுதவ அவசியமில்லை நன்றி,
வாழ்க நாராயண நாமம்.
எண்டா இப்படி இருக்கிறிர்கள். ஒருவன் உதவி செய்தாலும் குறை செய்யாவிட்டாலும் குறை என்று தமிழ் மடையர்கள் கூப்பாடு போடுவதே வழக்கமாயிற்று. வெள்ளத்தில் பாதிக்கப் பட்டதற்கு முழு காரணம் அரசியல்வாதிகளும் அரசாங்க ஊலியர்கலுமெ . முடிந்தால் ஊழல் செய்து அடையாறு ஆற்றையே மூடின தமிழர்களை கேளுங்கள். சும்மா தமிழன் எப்போதும் நேர்மையானவன் என்று கூரதிர்கள். நம்மினதிலும் நிறிய அயோக்கியர்கள் உள்ளனர். மறுக்க வேண்டாம். எனவே நன்கொடை கொடுத்தவர்களை இப்படி தரக் குறைவாக பெசாதிர்கள் கபோதிகளே.
Anonymous , நீர் உண்மையிலேயே முகவரி இல்லாதவருக்கு தான் பிறந்து இருக்க வேண்டும்.
[email protected] அருமையான கருத்து. கோடி கணக்கில் சம்பாதித்த அரசியல்வாதி எங்கே? அனைத்து தரபினரும் சேர்ந்து செயல் பட வேண்டும். நடிகர்களே குறை கூறி என்ன லாபம்? அவர்களால் முடிந்த உதவி தான் செய்ய முடியும். அவர்களும் மனிதர்கள்தான். கொள்ளைகரர்கள் அல்லரே… நல்ல உள்ளம் கொண்டவர்களை நோகடிக்க வேண்டாம். இதில் அரசியல் வேண்டாம். மனித நேயம் ஒன்றே போதும்.. என் கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.
தமிழர்கள் பணத்தை ரஜினி திரிடியதும் கிடையாது ஏமாற்றியதும் கிடையாது ஏன்னா அவர் அரசியல் வாதி இல்லை .கோடிக்கணக்கில் சம்பாரித்த பணம் அவருடைய உண்மையான உழைப்பு .நன்கொடை என்பது அவரின் விருப்பம் .அரசாங்கத்திற்கு வரி பணம் கட்டும் மக்கள் அவர்களை பார்த்துதான் கேள்வி கேக்க வேண்டும் ,மாறாக ரஜினியிடம் இல்லை .அப்புறம் எதுக்கு அரசியல் வாதிகளை தேர்ந்து எடுக்கிறீர்கள் ? அப்புறம் எதுக்கு சாமி கிட்ட போயி கேக்குறேங்க ,சாமிய எச வேண்டியதுதானே ?,,
அது சரி ரஜினியை நாங்கள் சந்திக்க இருக்கிறோம் ! அவரிடம் போயி 100 கோடி வெள்ளியாக தமிழ் நாட்டுக்கு வெல்ல நிவாரண நிதிக்கு கொடுங்க என்று கேக்க புறப்பட விருக்கிறோம் .அவர் 100 கோடி வெள்ளி கொடுத்தால்தான் மழை நிக்கும் ,வெள்ளமும் தானாக கடலில் போயி சேர்ந்து விடும் ,அவர் 100 கோடி கொடுத்த மறுகணமே வெள்ளம் தமிழ் நாட்டு பக்கமே திரும்பி பார்க்காது என்று நினைக்கிறோம் .
அட பாவம் செம்பருத்தி ,,இதை பதிவு செய்ய மறந்துட்டாங்க ,,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக நிவாரணப் பொருள்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார் ரஜினிகாந்த். அவரது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து தினமும் பல ஊர்களுக்கு லாரிகளில் நிவாரணப் பொருள்களை ரசிகர் மன்றத்தினர் மூலம் அனுப்பி வருகிறார் ரஜினி ரசிகர் மன்றப் பொருப்பாளர் சுதாகர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும்.. அதே நேரம் விளம்பரமின்றி செய்ய வேண்டும் என்பது ரஜினி சொல்லிவிட்டதால், வெள்ளம் பாதித்த டிசம்பர் 3 ம் தேதியிலிருந்து லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வரவழைக்கப்பட்டு, ரசிகர்கள் மூலம் அனுப்பப்பட்டன. முதலில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்தில் வைத்து இந்தப் பணிகள் நடந்தன. பின்னர் நிவாரணப் பொருள்கள் முழுவதும் ராகவேந்திரா மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு மேலும் பல லோடுகள் நிவாரணப் பொருள்கள் தருவிக்கப்பட்டன. பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து நிறைய பொருள்களை வரவழைத்திருந்தார் ரஜினி. சென்னை மட்டுமல்லாது, வெள்ளம் பாதித்த கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் முழுவதற்கும் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்த ரஜினி, இப்போது மக்கள் தங்கள் வாழ்க்கையைத் துவங்க அடிப்படைத் தேவையாக உள்ள பொருள்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பாய், போர்வைகள், மருந்துகள், சமையல் பாத்திரங்கள், அரிசி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பைகளை ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படுகிறது. இதுவரை ரூ 6 கோடிக்கும் அதிக மதிப்பிலான நிவாரணப் பொருள்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி வழங்கியிருக்கிறார். மேலும் சென்னையைச் சுத்தம் செய்ய பல்வேறு ஊர்களிலுமிருந்து வந்த ஊழியர்கள் தங்கிக் கொள்ள இலவசமாக ராகவேந்திரா மண்டபத்தை அளித்துள்ளார் ரஜினி. இந்த பணியாளர்கள் இன்று வரை மண்டபத்திலேயே தங்கி துப்புரவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.