சீனாவில் உலகின் மிகப்பெரிய குளோனிங் தொழிற்சாலை

china_cloninஉயிர் அங்கிகளின் பரம்பரை அலகினைக் கொண்டு அதே போன்ற வடிவம், இயல்புகளைக் கொண்ட மற்றொரு அங்கியை உருவாக்குவதே குளோனிங்.

இத் தொழில்நுட்பம் மூலம் மனிதனைத் தவிர ஏனைய சில அங்கிகள் மற்றும் தாவரங்கள் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதனை பாரிய அளவில் செய்வதற்காக சீனா உலகிலேயே மிகவும் பெரிய குளோனிங் தொழிற்சாலையினை அமைத்துள்ளது.

500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அரசாங்கத்தின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இத் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு முதல் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.

இத் தொழிற்சாலையில் அதிக அளவில் உணவு தொடர்பான குளோனிங் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com