வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில் மீது மர்மநபர்கள் சனிக்கிழமை நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.
வங்கதேசத்தின் வடக்குப் பகுதியான தினாஜ்பூரில் அமைந்துள்ளது கண்டாஜி கோயில். இந்தக் கோயிலில் “ராஷ் மேளா’ என்ற பண்டிகை சனிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது அங்கு மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸôர் அங்கு விரைந்து சென்று, அங்கிருந்தோரை பாதுகாப்பாக கோயிலில் இருந்து வெளியேற்றினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 7 பேரைப் பிடித்து போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர். வங்கதேசத்தில் அண்மைக்காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாத அமைப்பு எதற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
-http://www.dinamani.com