ஐ.எஸ் க்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் – ஜோன் கெரி

john_kerryஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் அமைதிக்கும் சட்டத்திற்கும் மக்களின் நலன்களுக்கும் இந்த அமைப்பின் செயற்பாடுகள் பாரியளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்க மாத்திரமலல முழு உலகத்திலும் சட்டத்தை மதிக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக வொஷிங்டனில் நடைபெறற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க செயலாளர் கூறியுள்ளார்.

இவர்களின் ஆக்கிரமிப்பின் காரணமாக நட்பு நாடுகளாக ஜோர்தான், துருக்கி, லெபனான் ஆகிய நாடுகளில் பெரும்பலானோர் அகிதகளாக்கப்பட்டுள்ளதொடு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் அந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெரிஸ், எகிப்து, பெய்ரூட், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் இதற்கு சிறந்த ஆதாரமாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈராக்கில் அவர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்த போதே அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவிரைவில் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தாக ஜோன் கெரி குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைவதற்கு ஜனாதிபதி ஒபாமா மூன்று விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச பிரசாரத்தை முடுக்கி விடுவதோடு அதற்கான பங்களாளர்களை அணி திரட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய புரட்சியின் ஆரம்பத்திலிருந்தே இந்த நிலை தோன்றியுள்ளதோடு சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் ராஜதந்திர ரீதியில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ராஜாங்க செயலாளர் ஜோன் குறிப்பிட்டுள்ளார்.

சிரியப் போருடன் அவர்கள் சிரிய எல்லையை தாண்டி முன்னேறவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மூன்றாவது கட்டமாக மேற்கொள்ள வேண்டும் என ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.

-http://world.lankasri.com