பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம்! வடக்கு முதல்வரிடம் கோரிய இந்திய உயர்ஸ்தானிகர்

vikky_sinha_met_001யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்கா இன்று மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு குறித்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தம்மிடம், பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் எனவும் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் காலம் நெருங்கி வருவதாகவும் கூறியதாக தெரிவித்த முதலமைச்சர்,

தாம் அதற்கு பதிலளிக்கையில், பிரிந்து செல்லும் எண்ணம் என்னிடம் இல்லை. எமக்கிடையிலான முரண்பாடு கொள்கை ரீதியானது என குறிப்பிட்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து இந்திய மீனவர்கள் குறித்து பேசப்படுகையில், இந்திய மீனவர்கள் அத்துமீறலினால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில்,

இந்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களும் பேசிக்கொள்வதன் ஊடாகவே தீர்வு கிடைக்கும் என தாம் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: