சட்டரீதியான பாதுகாப்புள்ள கேபியை கைது செய்ய முடியாது – சிறிலங்கா அரசாங்கம்!

KPகே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை இலகுவாக கைது செய்ய முடியாது என, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சா ராஜித்த சேனாரத்ன இதனைக் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம் அவரை சிறிலங்காவுக்கு அழைத்துவந்த முறைமையின் காரணமாக, அவரை கைது செய்வதற்கு சட்டரீதியான சிக்கல்கள் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிரேஷ்ட்ட நிலையில் இருந்த கே.பி.யை அரசாங்கம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருக்கிறது. எனவேதான் அவரை கைது செய்ய முடியாமல் இருக்கிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: