அமெரிக்காவும்,இந்தியாவும் விக்னேஸ்வரனின் அரசியல் நகர்வை விரும்பவில்லை! இந்திய நாளிதழ்

vigneswaranஉலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் அரசியல் ரீதியான நகர்வை விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரனுடன் தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, விக்னேஸ்வனை சந்தித்து தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தாமல், தமிழர் பிரச்சினைக்கு கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிணக்கை தீர்ப்பது கடினமான காரியமல்ல. எனினும் அந்தப்பிரச்சினையை பெரிதாக்கிவிடக்கூடாது என்று சிங்ஹா, விக்கினேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி சமந்தா பவரிடம், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்காக எதனையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சந்திப்பின் பின்னர் தமது டுவிட்டரில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள சமந்தா பவர், இலங்கையில் நல்லெண்ணத்தை கொண்டுவரும் சந்தர்ப்பத்துக்கு வடக்கின் முதலமைச்சர் உதவவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: