தமிழக வாழ் இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தாப்பம் வழங்கப்படும் என மீள்குடியேற்றää புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும்.
அவ்வாறு நாடு திரும்புவோருக்கு வாழ்வாதார வழிகள் உருவாக்கப்பட வேண்டும்.
சுமார் 8000 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
இராணுவம் ஏன் இவ்வளவு காணிகளை கைப்பற்றிக் கொண்டுள்ளது என்பது எனக்குப் புரியவில்லை.
இந்தக் காணிகளை கிரமமான அடிப்படையில் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளானவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
சுய விருப்பின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற சந்தர்ப்பம் வழங்கப்படும்.
வடக்கில் 157000 பேரும்ää கிழக்கில் 67,000 பேரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இடம்பெயர் மக்களுக்கு முன்னுரிமை அளித்து புதிதாக நிர்மானிக்கப்படும் வீடுகள் வழங்கப்படும் என அமைச்சர் சுவாமிநாதன் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com