இருட்டறையில் வாழ்வை கழித்த யாஸிதி பெண்களின் கொடூர வாழ்க்கை: வெளியான புகைப்படங்கள்

yazidi_rooms_001ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட யாஸிதி பெண்கள் மண்ணுக்கு அடியில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை அடிமைப்படுத்தி அவர்களை பாலியல் உறவுக்கு உட்படுத்துவதும், அவர்களை கொத்தடிமைகளாக சந்தைகளில் விற்பனை செய்வது என பல்வேறு அட்டூழியங்களை ஐஎஸ் அமைப்பினர் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவின் சிறுபான்மையினரான யாஸிதி பெண்களை சிறைபிடித்த ஐ.எஸ் அமைப்பு, அங்குள்ள பாலைவன பகுதியின் மண்ணுக்கு அடியில் சிறு சிறு பகுதிகளாக சிறைச்சாலை அமைத்துள்ளனர்.

இருட்டான அந்த சிறைக்குள், தூங்குவது, சாப்பிடுவது என அன்றாட வாழ்க்கையை கழித்துள்ளனர்.

இதில், உருக்கமான நிகழ்வாக அந்த சிறைக்குள் வாழ்க்கையை கழித்த பெண்கள், அங்குள் சுவர்களில் தங்களது அன்றாட நிகழ்வுகளை வரைபடமாக வரைந்துள்ளனர்.

மேலும், சில பெண்கள் ஐஎஸ் அமைப்பினரால் கடத்தி வருவதற்கு முன்னர், தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு தாங்கள் செலவிட்ட காலங்களை நினைவுகூர்ந்து சிறைக்குள் தங்கள் நேரத்தினை கழித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அவையில் யாஸிதியினர் மீது ஐஸ் அமைப்பினர் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஐநா தலைமை அதிகாரி நவிபிள்ளை, ஐஎஸ் அமைப்பினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது, போராட்டத்திற்கு உள்ளாக்குதல் என போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சிரியாவில் உள்ள பல்வேறு புதைகுழிகளில், பெரும்பான்மையாக யாஸிதியினரின் சடலங்களே உள்ளன.

மேலும் சிரியாவில் உள்ள Sinjar பகுதியில், இருந்த 40 முதல் 80 வயது மதிக்கத்தக்க 80பெண்களின் உடல்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்த பெண்களின் உடல்களாகவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com