ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சவுதி தலைமையில் அணி திரண்ட 34 இஸ்லாமிய நாடுகள்

isis_leader_001ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் 34 இஸ்லாமிய நாடுகள் அணிதிரண்டுள்ளன.

சிரியா, ஈராக்கின் பெரும்பகுதியை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ள ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

மேலும், கடந்த சில மாதங்களாக ரஷ்யாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளும் ஒன்றாக கை கோர்த்துள்ளன.

சவுதி அரேபியாவின் தலைமையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா பிராந்தியங்களைச் சேர்ந்த 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

ஆனால் இந்த கூட்டமைப்பில் இஸ்லாமிய நாடான ஈரான் இடம்பெறவில்லை.

சவுதி தலைமையிலான இந்த அணியில், துருக்கி, எகிப்து, லிபியா, ஏமன், மாலி, சாட், சோமாலியா, நைஜீரியா, மாலத்தீவு, பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் முகமது பின் சல்மான் அல் செளத் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளின் பிரதான பிரச்சனையே பயங்கரவாதம்தான்.

இதை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிரியாவும், ஈராக்கும் இந்த கூட்டணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com