மேலும் ஐந்து அம்னோ கிளைத் தலைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோம்பாக் தொகுதியில் உள்ள டெலிமா லெம்பா கிராமாட், கம்போங் கெமென்சா ஹிலிர், ஜெலாதெக் பெர்மாய், லேக் வியூ பத்து கேவ்ஸ், தாமான் மெலாவாதி ஆகியவையே அவ்வைந்து கிளைகளுமாகும்.
அவர்களின் பேச்சாளர் ஹம்டான் அப்ட் ரஹ்மான், இப்போதைய தலைமையில் நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறினார்.
எந்தவொரு தனிப்பட்டவரையும்விட கட்சியே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தனிப்பட்டவர் நலன்களுக்குமுன் கட்சியின் நலனை முன்வைக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும்”, என நேற்றிரவு, கோலாலும்பூர், தாமான் மெலாவாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
உங்கள் ஐவருக்கும் விரைவில் இருக்கிறது ஆப்பு….
ஆமாம் ஏன் சொல்லமாட்டீர் நஜிப் ஒபாமாவை அழைப்பு கொடுத்து அனைவருக்கும் இது மலாய்காரர் நாடு அல்ல யென்று வுனர்த்தியமைக்கு வுங்கள் வெறுப்பு அகோரம் தெரிகிறது,மற்றும் ஜி.எஸ்.தி ப்ரீம் எல்லோருக்கும் சமமாக அறிவிப்பால் கொதித்துபோய் வுல்லீர் வந்தவுடன் ஹிந்துக்கள் பிரச்சனையை கவனித்த பிரதமருக்கு நாம் எமாட்ரதையே வழங்கினோம் ஆதலால் இன்று பிரதமர் பாஸ் கட்சியோடு இணக்கம் கொள்ளபட்டுவருகிறது,அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.இரு மலாய் கட்சிகளும் இணைந்தால் நமக்கு மிஞ்சுவது 0000 தான்,மக்கள் வுணர ஒரு வாய்பை அமையலாம்,
வாழ்க நாராயண நாமம்.