சுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: தப்பித்த யாஸிதி பெண்ணின் கண்ணீர் கதை

yazidi_womenbeg_001ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான யாஸிதி பெண், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு ஐநாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்துவந்த நாதியா முராத் பாசீ தாஹா என்ற பெண்ணையும் மற்றும் சில பெண்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையிடமான மோசூல் நகருக்கு கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.

Isis sells women-being-sold-in-Mosulஅங்கு பெண்களில் உடல்கள் இறைச்சியை விற்பது போன்று விற்கப்பட்டன, கொடூர கொடுமைகளுக்கு ஆளான நாதியா(21) என்ற பெண் அங்கிருந்து தப்பித்துள்ளார், இவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் போரின் போது கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரிக்கும் 15 நபர்கள் கொண்ட குழுவிடம் தனக்கு நடந்தவை பற்றி கண்ணீர் மல்ககூறியுள்ளார்.

isis9தீவிரவாதிகளுக்கு பணிவிடை செய்ய வற்புறுத்தப்பட்ட நான், சுயநினைவை இழக்கும்வரை அவர்களால் சித்ரவதை செய்யப்பட்டேன், என்னுடைய சகோதரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.

இனி வாழவே முடியாது என்கின்ற அளவுக்கு யாஸிதி பெண்களுக்கு கொடூரம் அரங்கேற்றப்பட்டது, இவ்வாறு பல்வேறு அட்டூழியங்களை செய்துவரும் அவர்களை அழிக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

இவரின் பேச்சை கேட்ட பாதுகாப்பு கவுன்சில் இவரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இவ்வழக்கை எடுத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில், ஈராக்கில் யாஸிதி பெண்களை நிலத்திற்கு அடியில் இருட்டிய அடையில் சிறைபிடித்துவைத்திருந்த இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com