ஐ.எஸ் அமைப்பின் நிதி ஆதாரங்களை துண்டிக்க வேண்டும்: ஐநாவில் தீர்மானம்

isis_gainstanmerica_001சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போரிட்டு வருகின்றன.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பகுதியில் உள்ள எண்ணெய் வளங்ளை துருக்கி எல்லையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக ரஷ்யா, ஐ.எஸ் அமைப்பின் எண்ணெய் டேங்கர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதிஉதவியை தடுக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையின் 15 உறுப்பு நாடுகளின் நிதிமந்திரிகள் கூட்டத்தில் இத்தீர்மானமானது ஏற்கப்பட்டது.

தங்களது பகுதியில் உள்ள எந்தஒரு நபராலும் தீவிரவாதிகளுக்கு நிதிஉதவியானது கிடைக்க பெறக்கூடாது என்று உறுதிசெய்ய வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிசெய்யும் நிறுவனங்கள், இயக்கங்களுக்கு பொருளாதார தடையும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் தகவல்களை பகிர்ந்துக் கொள்வதில் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிக்கவும் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான பணபரிமாற்றத்தை கண்காணிக்க தனியார் செக்டாருடன் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com