உலக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அறிக்கை வெளியிட்ட ஐ.நா

refugee_count_001உள்நாட்டுப்போர் மற்றும் நாட்டில் நிலவி வரும் பொருளாதார சீர்கேடுகளால் ஏற்படும் பசி பட்டினியில் சிக்கித்தவிக்கும் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர்.

இவ்வாறு, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1992-ம் ஆண்டில் இருந்து அகதிகளாக வெளியேறி வேற்றுநாடுகளில் தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 20.2 மில்லியனாக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு இறுதியில் மட்டும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 5.95 கோடியாக உயர்ந்துள்ளது என ஐ.நா. அகதிகள் கண்காணிப்புத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக மக்கள்தொகையில் 122 பேரில் ஒருவர் தங்களது தாய்நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளார்.

மக்களைப்பற்றி ஆட்சியாளர்களின் அக்கறையின்மை மற்றும் சகிப்புத்தன்மையின்மை குறைந்து வருவதும் இதுபோன்ற குடிபெயர்வுக்கு முக்கிய காரணம் என்று ஐ.நா. அகதிகள் கண்காணிப்புத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் சிரியா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

மேலும், ஜேர்மனி, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ தஞ்சம் கேட்டு சுமார் 25 லட்சம் மக்கள் மனு செய்து காத்திருப்பதாகவும் அமெரிக்க அரசிடம் மட்டும் இதுபோன்ற சுமார் 10 லட்சம் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், இந்த ஆண்டின் இடையில் மட்டும் அகதிகளாக குடியேறியவர்களில் 84,000 பேர் கட்டாயமான முறையில் தங்கள் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முந்தைய ஆண்டில் 107,000 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

-http://world.lankasri.com