ஐ.எஸ். அமைப்பின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 15 அமைப்புகள்: உலக நாடுகளுக்கான எச்சரிக்கை

islamic_group_001ஐ.எஸ். அமைப்பினர் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் இடத்தை நிரப்புவதற்காக அடுத்ததாக 15 அமைப்புகள் காத்திருக்கின்றன என்று பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன.

எப்படியும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று இந்த நாடுகள் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த போரில் ஐ.எஸ்.அமைப்பினர் முற்றிலும் அழிக்கப்பட்டாலும் அவர்கள் இடத்தை நிரப்ப 15 தீவிரவாத இயக்கங்கள் சிரியாவில் செயல்பட்டு வருவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இயக்கங்களில் 65,000 தீவிரவாதிகள் வரை உறுப்பினராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சிரியாவில் உள்ள பல்வேறு தீவிரவாதிகள் குழுக்கள் அல் கொய்தாவின் கிளை அமைப்பான ஜப்ஹத் அல் நஸ்ரா,உடன் இணைந்து மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தங்களின் தாக்குதலை தொடருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை மற்ற தீவிரவாத இயக்கங்கள் மீதும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com