மோட்டார் சைக்கிள் ஓட்டிசென்ற 23-வயது மலேசியப் பெண் சிங்கப்பூரில் ஊட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 1.4கிகிராம் போதைப் பொருள்களுடன் பிடிபட்டார்.
மாலை மணி 4.20க்குச் சோதனைச் சாவடி வந்து சேர்ந்த அவரைச் சோதனையிட்டபோது அவரது பையில் 470 கிராம் ஹெரோய்னும் 980 கிராம் கெனாபிஸும் இருப்பதை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார் என குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடித் துறையும் மத்திய போதைப் பொருள் பிரிவும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது,
அப்பெண் மேல்விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார்.
-பெர்னாமா
……………………… இவர்களை கட்டும் ஆண்கள் நடுடேருவிலே இருப்பது நிச்சயம்