தாவாவைக் குலுக்கிய 6.2 சக்தி கொண்ட நில நடுக்கம்

uaஇன்று  அதிகாலை  ரைட்டர்  கருவில்  கிட்டதட்ட  6.2  என்று  பதிவான  நில  நடுக்கமொன்று  தாவாவைக்  குலுக்கியதாக  மலேசிய  வானிலை  ஆய்வுத் துறை  அறிவித்தது.

அந்நில  நடுக்கம்  இந்தோனேசியாவின்  தராகானில்  மையமிட்டிருந்ததாகவும்  ஆனால்  அதன்  அதிர்வுகள்  96 கிலோ  மீட்டருக்கு  அப்பால் உள்ள  தாவாவில்  உணரப்பட்டதாகவும்  அது  கூறிற்று.

சேதம்  பற்றிய உடனடி  அறிவிப்புகள்  இல்லை.  ஆனால்,  வீட்டில்  உள்ள  பொருள்கள்  சிதறிக்  கிடப்பதைக்  காண்பிக்கும்  நிழற்படங்கள்  மட்டும்  முகநூலில்  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்தன.