நேற்று பிற்பகல் வட தாய்லாந்தின் சியாங் மாயில் நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த மலேசியர்களின் குடும்பத்தார் 15 பேர் இன்று பெங்கோக் பயணமாவார்கள் என்று தெரிகிறது.
“அவர்கள் விபத்தில் மரணமடைந்தவர்களையும் தப்பித்தவர்களையும் அடையாளம் காட்டுவார்கள்”, என சியு போக்குவரத்து நிறுவன பொது நிர்வாகி டெரென்ஸ் யங் கூறினார்.
“இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் இறந்தவர்களின் உடல்களைக் கொண்டுவருவதற்கும் உதவ எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் மூவரும் உடன் செல்வார்கள்”, என்றாரவர்.
அதற்கு நான்கிலிருந்து ஏழு நாள்கள் பிடிக்கலாம் என்றவர் சொன்னார்.