நேற்று மிஸ் பிலிப்பீன்ஸ் உலக அழகியாக முடி சூட்டப்பட்டார். ஆனால், அதற்குமுன் அந்நிகழ்வுக்கு அறிவிப்பாளராக பணியாற்றிய ஸ்டீவ் ஹார்வே மிஸ் கொலம்பியாவை உலக அழகி என்று அறிவித்து விட்டார்.
அதனால் கொலம்பியா அழகி அட்ரியாட்னா குடிரெஸ் அறிவாலோ,21, உலக அழகியாக முடி சூட்டப்பட்டார். அப்போது ஹார்வே தம் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு பிலிப்பீன்சைச் சேர்ந்த பியா அலோன்ஸோ-வே உலக அழகி என்று அறிவித்தார். இதனால் கொலம்பியா அழகி சூட்டப்பட்ட முடியைக் கழட்டிக் கொடுக்க வேண்டியதாயிற்று.