கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த புரூனை அரசு: மீறுபவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Brunei-Flagகிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாக கூறி இந்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளனர்.

புரூணே நாட்டில் இந்த ஆண்டுமுதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அங்குள்ள மத அலுவல் அமைச்சகம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் பொதுப்படையாக வெளிப்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆனால் இஸ்லாமியர் அல்லாதவர்கள் தங்கள் குழுக்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமைச்சகம், அதை கட்டுப்படுத்தவே இந்த தடை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கிறிஸ்துமஸ் காரல்கள் பாடவோ, வாழ்த்து தெரிவிக்கவோ கூடாது எனவும் கண்டிப்புடன் புரூணே மத அலுவல்கள் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய குருக்கள், அரசு தெரிவித்திருக்கும் கருத்தினை எவரும் பெரிதுபடுத்தி பிரச்சனையாக்க வேண்டாம் எனவும்,

இஸ்லாமியர்கள் கண்டிப்பாக வேறு மதத்தினரின் கொண்டாட்டங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

புரூணே நாட்டில் ஒட்டுமொத்தமுள்ள மக்கள் தொகையில் 35 விழுக்காடு கிறிஸ்தவர்களும் புத்தமதத்தினை பின்பற்றுபவர்களும் உள்ளனர்.

-http://world.lankasri.com