சிங்கள ராணுவ முகாமில் இருந்து தப்பிக்கும் முன் நாள் தமிழ் புலனாய்வுப் பிரிவின் உளவாளிகள்

pulanaaivuவிடுதலைப் புலிகளோடு இலங்கை அரசு இறுதி யுத்தத்தில் ஈடுபட்டவேளை, கருணா அணியில் இருந்த சிலரை புலனாய்வுப் பிரிவில் இணைத்தார்கள். இவர்களில் சிலரே புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி பல தாக்குதல்களை நடத்திவந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் , மூத்த தளபதிகள் செல்லும் இடங்களை கவனித்து தாக்குதல் நடத்தவென ஒரு பிரிவு இருந்தது. அதனை பேட்டா 03 என்று அழைப்பார்கள். மற்றும் மக்களோடு மக்களாக இருந்துகொண்டு புலிகள் பற்றிய தகவல்களை சிங்கள புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிவந்த அணியை சின்ன வண்டு என்று அழைத்து வந்தார்கள்.

புலிகளை இலங்கை ராணுவம் யுத்த ரீதியாக வெற்றிபெற்ற பின்னர் , இந்த தமிழ் இளைஞர்கள் பலர் வெலிகந்தையில் மற்றும் அனுராதபுரத்தில் இருக்கும் ராணுவத் தளங்களுக்கு மாற்றப்பட்டார்கள். இன் நிலையில் கடந்த 3 மாதத்தில் குறித்த இந்த இளைஞர்களில் 2 பேர் காணமல் போயுள்ளார்கள். இது சிங்கள ராணுவத்திற்கு மத்தியில் ஒன்றுமே செய்யாமல் அங்கே உட்கார்ந்திருக்கும் இந்த தமிழ் இளைஞர் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. தங்களால் இனி இலங்கை ராணுவத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை. எனவே அவர்கள் எங்களை ஒருவர் பின் ஒருவராக முடிகப் போகிறார்கள் என்பதனை இவர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

தற்போது ராணுவ முகாமில் தங்கியிருந்த இதுபோன்ற தமிழ் இளைஞர்கள் சிலர் , அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக அதிர்வு இணையம் அறிகிறது. இவ்வாறு தப்பித்த இளைஞர்கள் சிலருக்கு , முள்ளிவாய்க்காலில் நடந்த போர்குற்றங்கள். மனித அவலங்கள் குறித்த அனைத்து தகவலும் தெரியும். இதன் காரணமாகவே அவர்களை வெளியே விடாமல் பல வருடங்களாக ராணுவம் தம்மோடு வைத்திருந்துள்ளார்கள். ஊர் உலகத்தை பொறுத்தவரை இவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்கள் உயிரோடு இருப்பது சில ராணுவ அதிகாரிகளுக்கே தெரியும். இன் நிலையில் தான் இவர்களில் சிலர் தப்பித்துள்ளார்கள். இவர்களை தாடி யாழில் ராணுவம் இவர்களது உறவினர்கள் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்கள்.

இதனூடாகவே இந்தப் பிரச்சனை தற்போது செய்தியாக கசிந்துள்ளது. தப்பித்த தமிழ் இளைஞர்கள் அவ்வளவு சீக்கிரம் இலங்கை ராணுவத்தின் வலையில் சிக்க மாட்டார்கள். அவர்கள் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாடு செல்லவே முற்படுவார்கள் என்பதனால் , பல முன் ஏற்பாடுகளை இலங்கை புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

-http://www.athirvu.com

TAGS: