வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 701 ஏக்கர் காணியை விடுவிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி நிறைவேற்றியமைக்கு நன்றி கூறும் அதேநேரம் படையினர் வசம் உள்ள மேலும் பல ஏக்கர் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை புதுவருடத்தில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.
-http://www.tamilwin.com