ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை!

prison2ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுப்போரை சட்ட ரீதியாக தண்டிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு.

இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்போருக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுகின்றது.

தமக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிலர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஆணைக்குழு விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இதேவேளை, தெங்கு ஆய்வு அபிவிருத்திச் சபையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள், சாட்சியமளிக்க முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, முன்னாள் அரச உயர் அதிகாரி அஜித் வேரகொட ஆகியோர் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: