ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவால் ஆபத்து: புடின்

putin_america_001தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தல்களில் அமெரிக்காவும் ஒன்று என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் பற்றிய புதிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையொப்பமிட்டுள்ளார்.

அந்த ஆவணத்தில், உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ரஷ்யா தனது நிலையை உயர்த்துக்கொள்ள பார்க்கிறது.

எனினும் மேற்கத்திய நாடுகளுக்கு இது எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக விவகாரங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் எதிர்தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி ரஷ்யா மீது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அழுத்தம் தருவதற்கு இது வழிவகுக்கும் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கவே நாட்டோ படைகள் விஸ்தரிப்பு செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அண்டை நாடுகளில் தனது ராணுவ – இராசாயன கூடங்களை அமெரிக்கா அதிகரிப்பதும் ரஷ்யாவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com