சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக ஒரு இஸ்லாமிய மதகுரு உள்பட 47 கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட காரணங்களுக்காக ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு மதகுரு உள்பட 47 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்ட இந்த கைதிகள், கடந்த 2003 முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தீவிரவாத குற்றங்களில் ஈடுப்பட்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
சவுதி அரேபியாவின் இந்த மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, ‘சவுதி அரேபியாவின் இந்த செயலுக்கு மோசமான எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்’ என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com
சட்டம் தன் கடமையை செய்யும்
சர்வாதிகார சட்டம் தன் கடமையைச் சரிவர செய்துள்ளது!