ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் புதிய ஜிகாதி ஜான் உருவாகிவிட்டானா? வெளியான அதிர்ச்சி வீடியோ

brton_5_0012016 ஆம் ஆண்டு ஆரம்பித்த கையோடு ஐ.எஸ் தீவிரவாதிகளும் தங்கள் வசம் சிக்கும் கைதிகளை கொலை செய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள்.

இதன் முதட்கட்டமாக 5 நபர்கள், பிரித்தானிய பாதுகாப்பு சேவைக்கு உளவு வேலை பார்த்த குற்றத்திற்காக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு, அதில் பிரித்தானிய பிரதமர் கமெரூனுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

சுமார் 10 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், ஆரஞ்சு ஆடை அணிந்திருந்த 5 நபர்களும் முழங்காலிட்டபடி இருக்கின்றனர், அவர்கள் பின்னால் நின்றுகொண்டிருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஒருவன், அரபு மொழியில், பிரித்தானிய பிரதமரே, நாங்கள் கூறுவது உங்களுக்குத்தான், நாங்கள் கொலைசெய்யப்போவது நம்பிக்கையற்றவர்களைத்தான்.

முக்கியமற்ற தலைவராக இருக்கும் நீங்கள், நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது, எங்களுக்கு எதிராக அமெரிக்க நடத்திய பிரச்சாரங்கள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் .

அதுமட்டுமின்றி, எங்கள் மீது நீங்கள் நடத்திய தாக்குதலுக்காக உங்கள் குழந்தைகளை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளான்.

இந்த வீடியோவின் இறுதியில் துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்கின்றன, அதன் பின்னர் தோன்றும் ஒரு சிறுவன்,  5 நபர்கள் முழங்காலிட்டிருந்த பக்கமாக தனது கையினை காட்டி அவர்களை கொல்லவேண்டும் என்று கூறுகிறான்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடமான சிரியாவில், பிரித்தானிய விமானப்படை 2015 ஆம் ஆண்டில் விமானப்படை தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அமெரிக்க விமானப்படை நடத்திய கூட்டுத்தாக்குதலில்,பிணையக்கைதிகளின் தலையை துண்டித்து& கொலை செய்து வந்த ஜிகாதி கான் இறந்ததையடுத்து, தற்போது யார் அடுத்த ஜிகாதி கான் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த வீடியோவில் பேசிய தீவிரவாதி அமெரிக்காவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஜிகாதி ஜானின் தோற்றத்தை போலவும், அவனது மிரட்டலும் பேச்சும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் புதிய ஜிகாதி ஜான் உருவாகிவிட்டதாகவே இந்த வீடியோவை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கமரூனை மிரட்டிய நபர் யார் என்பதனை உடனே கண்டு பிடித்த பிரித்தானிய புலனாய்வு !

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு மிரட்டல் விடுத்து , ஐ.எஸ் அமைப்பினர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். அதில் பேசிய நபரது ஆங்கிலம் பிரித்தானியாவில் பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலத்தை ஒத்து இருந்தது. இதனை அடுத்து பெரும் விசாரணைகளை பிரித்தானிய புலனாய்வாளர்கள் முடிக்கி விட்டுருந்தார்கள். இன் நிலையில் குறித்த வீடியோவில் பேசிய நபரின் குரலைக் கேட்க்கும்போது , அது எனது அண்ணா போல உள்ளது என்று கூறி ஒரு முஸ்லீம் பெண் பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே விடையம் சீரியஸ் ஆகியுள்ளது. உடனே விரைந்த புலனாய்வுத்துறையினர் , அன் நபர் முன்னர் எடுத்த போட்டோக்களை எடுத்து தற்போது வெளியான புகைப்படத்தில் உள்ள கண்களையும், அதனையும் ஒப்பிட்டு பார்த்துள்ளார்கள்.

பிரித்தானிய புலனாய்வு துறை அதிகாரிகள் தற்போது மிரட்டல் விடுத்த நபரை தாம் அடையாளம் கண்டுள்ளதாக கூறியுள்ளார்கள். அடுத்தது அந்த நபர் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

-http://world.lankasri.com