லண்டன் பொலிசாரிடம் 6 முறை மாட்டியும் தப்பித்த கமரூனை மிரட்டும் தீவிரவாதி – சித்தார்த்

சமீபத்தில் பிரித்தானிய உளவாளிகளை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாது, பிரித்தானியப் பிரதமை மிரட்டி அறிவித்தல் விட்ட நபரின் பெயர் சித்தார்த் டாக்ஹார் என்று அறியப்பட்டுள்ளது. இவருக்கு வயது 32. இவர் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் அமைப்பு ஒன்றுக்காக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் 6 தடவை கைதாகி பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார். அதுபோக இவரை இறுதியாக 2014ம் ஆண்டு பிரித்தானியப் பொலிசார் பிணையில் விட்டவேளை. நவம்பர் மாதம் இவர் , ரயில் ஒன்றில் ஏறி அப்படியே பரிஸ் சென்றுவிட்டார் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. இவரும் இவரது மனைவி மட்டும் பிள்ளைகள் அனைவரும் சிரியாவுக்குள் சென்று அங்குள்ள ஐ.எஸ் அமைப்போடு இணைந்துவிட்டார்கள்.

தற்போது இவரே , முன்னணியில் இருந்து பிரித்தானிய அரசுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தி வருவதோடு பிரித்தானிய உளவுத்துறைக்கும் பெரும் சவாலாக இருக்கிறார். இவரை லண்டன் பொலிசார் எவ்வாறு பிணையில் விட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்தோடு பிணையில் வெளியே வந்த நபர் எவ்வாறு நாட்டை விட்டு தப்பிச் சென்றார் ? அவரது பெயரை ஏன் உடனடியாக எல்லை பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லை, என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதுபோக பிரித்தானியப் பொலிசார் அவரை பிணையில் வெளியே விடுவித்துவிட்டு, பாஸ்போட்டை கொண்டு வந்து தம்மிடம் தருமாறு கூறியுள்ளார்கள் ஒரு மாங்காய் மடையர்கள் போல.

அன்றைய தினமே சித்தார்த் பிரன்சுக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். தற்போது தாம் பெரிய தவறுவிட்டு விட்டதாக பொலிசார் உணர்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அத்தோடு உள்ளக விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என் அதிர்வு இணையம் அறிகிறது.

-http://www.athirvu.com