இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை கட்டாயமானதாகும்! ஆயர் யோசப் பொன்னையா

Batti_Bishop001வடக்கு கிழக்கு மக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு காலத்தின் தேவையாகும். இந்த அமைப்பிற்கு எனது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.

இன்றைய தினம் (06.01.2016) தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா, ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் அலன் சத்தியதாஸ் ஆகியோர் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் மேதகு யோசப் பொன்னையா ஆண்டகையைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கட்டாயமானதாகும்.

அதிலும் வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளமையானது வடக்கு கிழக்கு மாகாணங்களின் உறவைப் பலப்படுத்தப் பேருதவியாக அமையும்.

எச்சந்தர்ப்பத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்து நின்று செயற்படக்கூடாது. நாம் தனித்தனியாக இயங்குவோமாயின் அது எமது ஒற்றுமைப் பலத்தைச் சிதைத்துவிடும்.

எனவே வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியமையை நான் பாராட்டுவதுடன் அந்த அமைப்பை வரவேற்கிறேன்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை காலத்தின் தேவை என்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: