வட மாகாணத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இராணுவத்தினரால் நடாத்தி செல்லப்பட்ட இராணுவ வைத்தியசாலையின் புகைப்படங்களே அவ்வாறு வெளியாகியிருந்ததாகவும், அது இராணுவ சித்திரவதை முகாம் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களின் நிமிர்த்தமே குறித்த கட்டிடத்தை சூழ முள்வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கை இராணுவத்தினரால் எவ்வித சித்திரவதை முகாம்களும் நடாத்தப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com